News August 18, 2024
வடக்குத்தாமரைகுளத்தில் ஆட்சியர் ஆய்வு

வடக்கு தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சன்ன இரக நெல்-கோ 55 நெல் ஆதார விதைகள் உற்பத்திப்பண்ணையை ஆட்சியர் அழகு மீனா நேற்று பார்வையிட்டார். விதைப்பண்ணையில் உருவாக்கப்படும் நெல்களின் தரத்தினை எவ்வாறு கண்டறிவது என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து பறக்கை பகுதியில் வேளாண் உழவர் விற்பனை குழுக்கள் மற்றும் விவசாயிகள் நெல் அறுபடை பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
Similar News
News October 19, 2025
குமரி: பள்ளி மாணவிகள் விண்ணப்பியுங்க

குமரி ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 7 விடுதிகள் உள்ளன. இதில் அழகப்பபுரம் சமூக நீதி விடுதியில் 33 காலியிடங்கள் உள்ளன. தகுதி உடைய மாணவிகள் விடுதிகாப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
News October 19, 2025
நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ரத்து

வண்டி எண் 06053 மற்றும் 06054 ஆகிய நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயிலும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்புரையிலும் இம்மாதம் 28 மட்டும் 29 தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
News October 18, 2025
குமரி: 2 பேரை பிடிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

புதுக்கடை சிறிய வண்ணன்விளை பகுதியை சேர்ந்த ரீகன், கேரள மாநிலம் கையித்தோடு பகுதியை சேர்ந்த ஷபீக் ஆகிய 2 பேர் மீதும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்கள் 2 பேரும் நீண்ட நாட்களாக கோர்ட்டில் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் 2 பேரையும் பிடித்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த குழித்துறை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.