News October 6, 2024

வடகிழக்கு பருவ மழை ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழையின் போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெள்ள பாதிப்பு குறித்த தகவலகளை 8300929401 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

News November 20, 2024

கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.