News November 22, 2024
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: இந்த பகுதிகளில் மின் தடை!

காரைக்குடி, நெலுமுடிக்கரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம், சிங்கம்புனரி, அ.காளாப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 6) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பாரி நகர், பேயன்பட்டி, பழையூர், செல்லப்பனேந்தல், மாரநாடு, ஆவரங்காடு, புலியூர், கொந்தகை, செருதப்பட்டி, என்பீல்டு, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 5, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சிவகங்கை: மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும் வண்டி எண். 16751 சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (Boat Mail), மற்றும் வண்டி எண்.22661 எழும்பூர்-இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டி ஆகியவை தற்காலிகமாக நாளை முதல், டிசம்-15 வரை தாம்பரம் வரை இயங்கும், எழும்பூர் செல்லாது. சிவகங்கை மாவட்ட பயணிகள் இதற்கு தகுந்தமாதிரி பயணத்தை அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.


