News September 29, 2025
வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருவாய் துறை, மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.
News December 8, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, தஞ்சை நகர், பேராவூரணி, அய்யம்பேட்டை, பூண்டி, மின் நகர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை ( டிச.9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் (டிச.10) வடசேரி மற்றும் ஈச்சங்கோட்டை துணைமின் நிலையங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க


