News April 15, 2024
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 21-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
Similar News
News December 17, 2025
புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இச்சடி சாலையில் நேற்று அசோக்குமார் (49) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
புதுகை: தெருநாய்களால் பலியான 20 ஆடுகள்!

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் செம்மறி ஆடுகளை வளர்ந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 20 ஆடுகளும் பலியாகின.
News December 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


