News February 18, 2025

வங்கதேசத்தினர் 5 பேர் கைது

image

வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து திருப்பூரில் போலீசார் விசாரணையில் கான்ஜன் அலி, முகமது மொனிருல் இஸ்லம், மிலோன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதேபோல் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலம்கீர் சர்தார், அரீப் மியா என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 8, 2025

டிகிரி, இன்ஜினியர் படித்தவர்களுக்கு அரசு வேலை

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருப்பூரில் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

News July 8, 2025

ரிதன்யா கணவர் ஜாமின் மனு தள்ளுபடி

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்ம் திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

News July 7, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!