News April 3, 2025
வக்கீலை வெட்டிய இருவருக்கு 1 ஆண்டு சிறை

அம்பை அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை கடந்த 2021-ஆம் ஆண்டு இடப்பிரச்சனை சம்பந்தமாக அவரை அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றவாளியான வினோத் என்ற உலகநாதன் (29) பூதபாண்டியன் (58)ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News January 1, 2026
நெல்லையில் இனி 1000 பேருக்கு IT வேலை

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
News January 1, 2026
நெல்லை: ஜன.4 முதல் வீடு தேடி வரும்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
நெல்லை: ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <


