News April 15, 2025

வக்கீலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

image

பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 14, 2025

திருவாரூர்: பெண் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு!

image

முத்துப்பேட்டை தில்லைவிளாகத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வியின் வீட்டு ஆடு அப்பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்பவரின் வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மலர்கொடி செந்தமிழ் செல்வியை சாதி பெயரை கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த புகாரின் அடிப்படியில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், மலர்கொடியை தேடி வருகின்றனர்.

News November 14, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 13, 2025

திருவாரூர்: SIR மாதிரி விண்ணப்பம் வெளியீடு

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பம் நிரப்பும் முறை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில், மாதிரி படிவம் நிரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுக்கு தரப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!