News April 5, 2025

லைன் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் லைன் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 – 25 வயது உடையவர்கள் வரும் மே 3ஆஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 9, 2025

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

image

பரந்தூர் விமானநிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News April 9, 2025

சாதனைகள் படைத்த அரசு பள்ளி மாணவி, மாணவனுக்கு பாராட்டு

image

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பி.கே.எம்.போனிக்ஸ் ஷிட்டு ரியோ கராத்தே அசோசியேசன் தலைவர் முரளியிடம், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று பல்வேறு தேசிய அளவிலான கராத்தேப்போட்டி மற்றும் மாநில அளவிலான டேக்வாண்டா மற்றும் சிலம்ப போட்டிகளில் தங்கம் வென்ற ஆற்காடு நாராயண சுவாமிப் பள்ளி மாணவி சரஸ்வதி & முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவன் அறிவுநிதியை மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

News April 9, 2025

ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் மீது புகார்

image

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதிமுகவை சேர்ந்த மேவலூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமி மற்றும் அவரது கணவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!