News April 24, 2025

லேப்டாப் பிரச்னைக்கு லட்சக்கணக்குல தீர்வு!

image

ஜெகதளா, காரகோரையைச் சேர்ந்த ஜெயராமன் 2018ல் வாங்கிய லேப்டாப் அடிக்கடி பழுதானதால், அதை மாற்ற் தரும்படி சம்பந்தம்பட்ட கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதற்கு கடைகாரர்கள் மறுத்ததால், ஜெயராமன் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்லேப்டாப்பின் விலை ரூ.1.14 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு

Similar News

News November 23, 2025

நீலகிரி: WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 22, 2025

நீலகிரி கலெக்டர் உத்தரவு

image

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள தேவாலாவில் அமைந்து உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் மீது ஆபத்தான கட்டிடம் இடிந்த விழுந்தது. இதனால் ஆபத்தான கட்டிடங்களை அகற்ற கோரி முன்னாள் எம்.எல்.ஏ திராவிடமணி கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார். எனவே கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆபத்தான கட்டிடங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

News November 22, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (22.11.2025) மற்றும் நாளை (23.11.2025) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளை தொடர்புகொண்டு விரைந்து விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!