News March 28, 2025
லேப்டாப்கள் திருட்டு: போலீசாருக்கு ஷாக்

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து லேப்டாப்கள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் அதே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களே அந்த லேப்டாப்களை திருடியது தெரியவந்தது.
Similar News
News November 16, 2025
செங்கல்பட்டு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
செங்கல்பட்டு: வெற்றிலை, சாக்பீஸில் இப்படி ஒரு சாதனையா?

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சீதளா தேவி. இவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1330 குறட்பாக்களையும் வெற்றிலை, மரக்கிளிப், சாக்பீஸ், சோப்பு, மண்பாண்டம், சேலை, பைபர் தட்டு, இந்திய வரைப்படம் சோழி என 9 வகையான பொருட்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 11 உலக சாதனை படைத்துள்ளாராம்.
News November 16, 2025
ALERT: செங்கல்பட்டில் கனமழை வெளுக்கும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.17) மற்றும் நாளை மறுநாள் (நவ.18) கன முதல் மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களுக்கு முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.


