News April 28, 2025

லிப்ட் கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

image

விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Similar News

News April 28, 2025

பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

image

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

error: Content is protected !!