News March 26, 2025

லிங்கம்பட்டி மலையில் தீ விபத்து!

image

துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டி அருகே உள்ள கிளாமரத்துக்குட்டு எனும் மலைப்பகுதியில் நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் தீப்பற்றி எரிய தொடங்கி, சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக மலையில் காய்ந்த சருகு, லெமன் வகை புற்கள் தீப்பிடித்து எறிந்தன. இத்தகைய நிலையில் இப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும், ஆகையால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 17, 2025

திருச்சி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருச்சி: சமூக நீதி நாள் முதலமைச்சர் உறுதிமொழியேற்பு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எம்.பி-க்கள் ராஜா, திருச்சி சிவா, துரை வைகோ, அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.

News September 17, 2025

திருச்சி To டெல்லிக்கு நேரடி விமான சேவை

image

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்றிலிருந்து தொடங்கிய நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விமான பயணிகள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

error: Content is protected !!