News April 3, 2025
லாரி மோதி பயங்கர விபத்து

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் ESI மருத்துவமனை எதிரில் லாரி ஒன்று இரண்டு மினி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். லாரி ஓட்டி வந்த ஒட்டுனர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து முக்காண்டபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 5, 2025
கிருஷ்ணகிரியில் விசிட் பண்ண சூப்பர் ஸ்பாட்

கிருஷ்ணகிரியில் அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கிருஷ்ணகிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பல வரலாற்று சின்னங்களை காணலாம். இங்கு கிருஷ்ணகிரியை பற்றி நீங்கள் அறியாத வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News April 4, 2025
கிருஷ்ணகிரியில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி தொடங்கிய நீச்சல் பயிற்சியை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தொடங்கிவைத்தாா்.12 நாள்கள் நடைபெறும் முதல்கட்ட முகாமில், சிறுவா், சிறுமிகள், பொதுமக்கள் என 18 போ் பயிற்சி பெறுகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.15 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <