News April 18, 2025
லாரி மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 14, 2025
செங்கல்பட்டு: மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர்!

செங்கல்பட்டு: சிவகங்கையைச் சேர்ந்த பிரபு (27), தாம்பரத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகே தனது மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரபு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 14, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர் 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.