News March 18, 2024
லாரி தலைகுப்புற கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 3, 2025
ஈரோட்டிற்கு புதிய பெருமை

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் விவசாயப் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், மாநிலத்தில் புவியியல் குறியீடு (Geographical Indications – GI) அங்கீகாரம் பெற்ற பொருட்களின் பட்டியலில் மேலும் 5 பொருட்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபாடியில் தயாரிக்கப்படும் நாட்டு சக்கரை இடம்பெற்றுள்ளது. (ஈரோடு மக்களே நம்ம ஊர் பெருமையை SHARE பண்ணுங்க)
News December 3, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிறந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான சமூக சீர்திருத்தம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோர் https://awards.tn.gov.in. இணையதளத்தில் வரும் 31ஆம் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News December 3, 2025
ஈரோடு : இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


