News February 10, 2025
லட்சக்கணக்கில் சம்பளம்; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த <
Similar News
News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 20, 2025
வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
கரூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.