News April 23, 2025
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது வீட்டின் மின் மீட்டர் பெட்டியை இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யக்கோரி சூலக்கரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ரூ.1000 லஞ்சம் பெற்றதாக 3.1.2012 அன்று கைது செய்யப்பட்டார். இதில் கனகராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 30, 2025
விருதுநகர்: கை கழுவும் கேப்பில் கைதி தப்பி ஓட்டம்

வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்தனர். வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு மாலை விருதுநகர் சிறைக்கு, இரு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். வழியில் அழகாபுரியில் ஒரு ஓட்டலில் சாப்பிட கை கழுவ செல்லும்போது செந்தமிழ்ச்செல்வன் தப்பி ஓடியதால் போலீஸ்காரர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
News November 30, 2025
விருதுநகர்: சோதனையில் சிக்கிய உணவகம்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு உணவகத்தில் பழைய சிக்கன் – 5 கிலோ, மாவு – 37 கிலோ, சப்பாத்தி – 13 கிலோ பறிமுதல் செய்தனர். இது தவிர லேபிள் விபரங்கள் இல்லாத 3 கிலோ கிழங்கு மாவு, ஒரு கிலோ முந்திரி பருப்பு, 7 லிட்டர் வினிகர் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தனர்.
News November 29, 2025
சிவகாசி: வருவாய் ஆய்வாளர் கைது

சிவகாசி அருகே நடையனேரியை சேர்ந்தவர் கோட்டைராஜ் (32). இவர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மாதம் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சென்னையிலிருந்த கோட்டைராஜை கைது செய்தனர்.


