News January 23, 2025

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

image

திருவள்ளூர் மாவட்டம் சத்யவேடு கூட்டுச்சாலையில் லாரியை மடக்கி பணம் வசூலித்ததாக தலைமை காவலர் கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கோபிநாத் உடன் ஊர் காவல் படையை சேர்ந்த சரவணனையும் சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் எஸ்.பி ஆணை பிறப்பித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

எண்ணூர் கடலில் மூழ்கி பலி – எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த தேவகி, காயத்ரி, பவானி, ஷாலினி ஆகியோர் இன்று (01.11.2025) சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. கும்மிடிப்பூண்டி MLA டி.ஜே. கோவிந்தராஜன் மருத்துவர்களிடம் விரைவாக பிரேதப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

News November 1, 2025

சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

image

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 1, 2025

திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை

image

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (நவ.2 ந்தேதி), மாலை தொலைத்தொடர்புக்கான LVM3-M5 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!