News April 29, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News September 16, 2025
554 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க பரிந்துரை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அண்ணாமலையார் கோயில் மலையில் உள்ள 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரைத்தது.
News September 15, 2025
பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
தி.மலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 15.09.2025 நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் , இஆப., கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துரையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.