News April 13, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News April 29, 2025
ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
News April 28, 2025
திருவண்ணாமலை சிறப்புகள்

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
தி.மலையில் எந்த பதவியில் யார்?

தி.மலை மாவட்ட ஆட்சியர்- தர்ப்பகராஜ் (04175-233333)
தி.மலை மாவட்ட எஸ்.பி- சுதாகர் ( 04175-233431)
மாவட்ட வருவாய் அலுவலர்- இராம்பிரதீபன் (04175-233006)
தி.மலை மாவட்ட திட்ட இயக்குனர்- ரா.மணி (04175-233720)
மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.