News April 18, 2025

ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04364-290761 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News October 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 279.90 மி.மீ மழை!

image

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மயிலாடுதுறையில் 58.20 மி.மீ, மணல்மேட்டில் 36 மி.மீ, சீர்காழியில் 65.80 மி.மீ, செம்பனார் கோயிலில் 53 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் 279.90 மி.மீ பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

மயிலாடுதுறை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>> ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!