News April 18, 2025
ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04362-231336, 9445000286 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News January 9, 2026
தஞ்சாவூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை தொடர்ந்து திருடி வந்ததால் கந்தர்வகோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின்படி, கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.
News January 9, 2026
தஞ்சாவூர்: செத்து மிதந்த மீன்கள்

கும்பகோணம், அகராத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்த இடத்தில் மீன்குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறார். மீன்கள் அனைத்தும் தற்போது வளர்ந்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் அவர் குளத்திற்கு சென்ற போது, குளத்தில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 9, 2026
தஞ்சாவூர்: நூதன முறையில் மோசடி – 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் எல்லையில் கறம்பக்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


