News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News November 20, 2025
தஞ்சை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல் !

தஞ்சை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
தஞ்சை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2018-ம் ஆண்டு அய்யம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற பொருட்களை திருடு போன வழக்கில் அய்யம்பேட்டை போலீசார் விசாரணையில் குற்றவாளியான பாபநாசம் வடக்கு மாங்குடியைச் சேர்ந்த தங்கமுனுசாமி என்பவர் கைது செய்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமுனுசாமிக்கு 4 வருட சிறை தண்டனை, 2000 அபதாரம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
News November 20, 2025
தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.


