News March 25, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 20, 2025
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.
News April 20, 2025
மனித உரிமையை நிலைநாட்டக்கூடியது: முதல்வர்

குன்றத்தூரில் நேற்று (ஏப்ரல் 19) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, மனித உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட கூடியது” என தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.
News April 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.