News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 415286 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News December 9, 2025

மானாமதுரை: டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

image

மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் அய்யனார் (17), நேற்று இருசக்கர வாகனத்தில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது சர்வீஸ் ரோட்டிலிருந்து மேம்பாலத்திற்கு ஏற போடப்பட்டிருந்த இரும்பிலான படிக்கட்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

சிவகங்கை: நாதக வேட்பாளர் புகார்; ஆட்சியர் விளக்கம்

image

சிவகங்கையில் நாதக வேட்பாளர் மற்றும் அவரது கணவர் பெயர் SIR-ல், இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் உடனடியாக சரி செய்யப்படும் என சிவகங்கை ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார். Check list என்பது இப்பணியில் உள்ள குறைகளை களைவதற்காக வழங்கப்பட்ட விவரங்கள்தான். இது இறுதிப்பட்டியல் அல்ல என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!