News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, தேனியில் உள்ள 4,25,919 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News December 10, 2025
தேனி: மாணவர்களுக்கு கல்வி கடன்; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் (Education Loan Camp) வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (டிச.10) நடைபெற உள்ளது. எனவே, உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 10, 2025
தேனியில் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர்புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. கபீர்புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 15.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
கம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கம்பம் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு நேற்று (டிச.8) தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது 11 பேர் சட்ட விரோதமாக பணம் மற்றும் டோக்கன்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


