News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள 5,73,949 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

Similar News

News October 22, 2025

குமரி: வெள்ளத்தில் செல்பி எடுக்க வேண்டாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்”: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர் நிலைப்பகுதிகளான வாய்க்கால்கள், ஓடைகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் பாயும் வெள்ளத்தினை வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ,கால்களை நனைக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 22, 2025

குமரிக்கு இன்று கனமழை ALERT!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்துக்கு இன்று (அக்.21) மிக கனமழை பெய்யக்கூடும் என ALERT எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மக்களே வெளியே போகும் போது குடை எடுத்துட்டு போங்க…ஷேர்!

News October 22, 2025

குமரி: பட்டாசு வெடித்த 13 பேர் மீது வழக்கு

image

தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதை கண்காணிக்க மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. குமரியில் நேர விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். 

error: Content is protected !!