News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
Similar News
News December 4, 2025
குளித்தலையில் அருகே 6 பேருக்கு காப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சரக்கம்பட்டி கருப்புசாமி கோவில் பகுதியில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிய ளவில் ரோந்து சென்றனர்.அப்போது பணம் வைத்து சூதாடிய சரக்கம்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (30), தங்கமுத்து (26), பழனிச்சாமி (41), ஆண்டியப்பன் (26), சுப்பிரமணி (45), மணி (55), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News December 3, 2025
கரூர்: காவல்துறை சார்பில் உதவி எண் வெளியீடு

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.
News December 3, 2025
கரூர்: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வெண்ணைய்மலை, கரூர் வளாகத்தில் 08.12.2025 அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


