News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3,90,621 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News December 8, 2025
திருவாரூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
திருவாரூர்: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்து, கீழ்க்கண்ட காவல் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் 9498110861, நன்னிலம் 9498143926, மன்னார்குடி 9498183264, திருத்துறைப்பூண்டி 9445407674, முத்துப்பேட்டை 9840717894, தனிப்பிரிவு அலுவலகம் 04366 225925 & 9498100865, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 830058812.
News December 8, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.7) இரவு 10 மணி முதல் இன்று (டிச.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


