News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள 2,16,292 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News September 19, 2025
BREAKING: நாகை வரும் விஜய் – திடீர் மாற்றம்

நாகை புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.20) பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்தினை மாற்ற கோரி தவெக பொது செயலாளர் என்.அனந்த் வைத்த கோரிக்கையை ஏற்று, புத்தூர் அண்ணா சிலை அருகே மதியம் 12.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். SHARE NOW !
News September 19, 2025
நாகை: விவசாயிகளுக்கு விருது – கலெக்டர்

நாகை மாவட்டத்தில் நவீன வேளாண் தொழில்நுட்ப கருவிகள், சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கொண்டு சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாயம் செய்யும் நபர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!
News September 19, 2025
நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!