News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இம் மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News September 16, 2025

தர்மபுரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில்
தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ், தர்மபுரி எம்பி. மணி அடையாள அட்டைகளை இன்று வழங்கினர்.

News September 16, 2025

தர்மபுரி :MCA,M.Sc,BE/ B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள்<> இந்த<<>> லிங்க் மூலம் அக்.3 வரை விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

image

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17726947>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!