News March 18, 2025
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் நாளை ஏலம்

சேலம், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்திய 41 வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனை அடுத்து 41 வாகனங்களை நாளை காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. சேலம் சர்க்கார் கொல்லப்பட்டிஉணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.
Similar News
News March 19, 2025
சேலம் GH-ல் பாலியல் தொல்லை? 3 மணி நேர தொடர் விசாரணை

சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றிய 30 வயது பெண்ணுக்கு, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் மற்றும் கமிஷனரிடம் புகார் வழங்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
குழந்தை திருமணம் – கலெக்டர் எச்சரிக்கை

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 18, 2025
தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேர்வு எழுத சென்ற மகன்

சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள செங்கரடு பகுதியில் வசித்து வந்த கணேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 18) காலமானார். தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மகன் மணிகண்டன், தனது தந்தையின் கனவை நிறைவேற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு உறவினர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.