News January 24, 2025
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
BREAKING திருப்பூருக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News December 18, 2025
காங்கேயம்: மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 18, 2025
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!