News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, தி.மலை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 2, 2025
தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

சேத்துப்பட்டு மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோனமங்கலம், வெளக்கம்பட்டு, மருத்துவம்பாடி, இடையங்குளத்தூர், கரிப்பூர், நம்பேடு, உலகம்பட்டு, கங்கைசூடாமணி, முடையூர், ஆத்துரை, தேவிகாபுரம், ஓதலவாடி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


