News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

image

நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருப்பத்தூர் மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

திருப்பத்தூரில் தொழில் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!

image

திருப்பத்தூரில் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ளார். இதற்கான விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தின் வாயிலாகவும் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

News September 18, 2025

திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும்போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருபபத்தூர்: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசெளந்திரவல்லி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு வியாபாரிகள் தங்களுடைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!