News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: தங்க மோதிரத்தை தொலைத்த மாணவி விபரீத முடிவு!

மேல்வாழப்பாடியை சேர்ந்த சக்திவேல், செல்வியின் மகள் கௌரி (17), சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கௌரியிடம், கையில் இருந்த தங்க மோதிரத்தை எங்கே என கேட்டு அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


