News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். இதில், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் ஆகியவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 25, 2025

விழுப்புரத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச. 26) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News December 25, 2025

விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

image

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

News December 25, 2025

விழுப்புரம்: சரக்கு லாரி மோதி இளைஞர் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கூனிமேடு அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில், தனுஷ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா், இறந்து போன தனுஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!