News October 23, 2024
ரூ.83 லட்சம் மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதனைச் சார்ந்த 10 கோயில்களில் உள்ள உண்டியலை அனைத்தும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று(அக்.22) அனைத்து கோயில்களின் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பழைய திருமண கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. காணிக்கையாக 83 லட்சத்து 24 ஆயிரத்து 637 ரூபாயும் 196 கிராம் தங்கமும் 699 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது.
Similar News
News December 3, 2025
மதுரை: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

மதுரை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
மதுரை: டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா எனுமிடத்தில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, கடையில் அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதை தொட்ட டீ மாஸ்டர் பாலகுரு (50) கீழே விழ, அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) என இருவரும் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News December 3, 2025
மதுரை: ஜாமீனில் வந்தவரை கொலை செய்த 3 பேர் கைது

மதுரை மீனாட்சிபுரம் பாண்டித்துரை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த அவரை நாடக மேடையில் படுத்து தூங்கிய போது, மர்ம கும்பலால் பாண்டித்துரையை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் விசாரணையில் முன் விரோத காரணமாக கொலை நடந்தது எனவும், பாண்டித்துரையுடன் சுற்றித்திரிந்த செல்லூர் ராஜதுரை (35), மணிரத்தினம் (34), டேவிட் அந்தோணி ராஜ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


