News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
Similar News
News December 4, 2025
நாகை: பெண் அரசு ஊழியரிடம் செயின் பறிப்பு

திருக்குவளை அடுத்த குண்டையூரை சேர்ந்தவர் ராதா (40). நாகை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணி செய்து வரும் இவர், சம்பவத்தன்று ராதா என்பவருடன் ஸ்கூட்டரில் மேலப்பிடாகையில் இருந்து திருக்குவளைக்கு சென்றுள்ளார். அப்போது மீனம்பநல்லூர் அருகே வேறொரு டூவீலரில் பின்னால் வந்த 3 நபர்கள் ராதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
நாகை: ஸ்கூட்டர் வழங்கிய கலெக்டர்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச.3) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப .ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


