News March 27, 2025
ரூ.75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி செய்த மூவர் கைது

திசையன்விளையை சேர்ந்த அந்தோணி செல்வம் (40) ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரியாஸ் (36), அய்யாதுரை (37), இசக்கி முத்து (28) ஆகியோர் ரூ.75 லட்சம் கொடுத்து 82,691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்மூலம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த ரூ.75 லட்சம் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 3, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கோபாலசமுத்திரம் பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (65) .
நேற்று முன்தினம் மாலை மொபெட்டில் பணிக்கு சென்ற போது தடுமாறி கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். கல்லூரி ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
News December 3, 2025
நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தேனி, தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.