News April 2, 2025

ரூ.6,000 பெற உடனே விண்ணப்பிக்கவும் 

image

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத் திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உங்கள் விவசாய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. 

Similar News

News October 19, 2025

கொடைக்கானலில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!

image

பொள்ளாச்சியைச் சேர்ந்த 10 வாலிபர்கள் நண்பர்கள் குழுவாக நேற்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நந்தகுமார் (வயது 21) என்பவர் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News October 19, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News October 18, 2025

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கடும் சோதனை

image

திண்டுக்கல் ரயில்வே நிலையம் நுழைவாயில் முன்பு இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாரேனும் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து பட்டாசு மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா? திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் கடும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

error: Content is protected !!