News December 5, 2024
ரூ.600 கோடி வழங்க புதுவை முதல்வர் கடிதம்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
Similar News
News October 24, 2025
புதுவை: ஜிப்மரில் காப்பீடு திட்ட பதிவு துவக்கம்

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆதார் மற்றும் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் ஓ.டி.பி., சரிபார்ப்பிற்காக எடுத்து வந்தால் 14 இலக்கம் கொண்ட இலவசமாக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்திற்கான பதிவு செய்வதோடு, பயனாளர் அட்டை பதிவிறக்கம் செய்து தரப்படும் என ஜிப்மர் இயக்குனர் நேற்று தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
புதுவை: அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதுவை உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
News October 24, 2025
புதுவை: மாணவனை கொன்ற பெண்ணிற்கு ஆயுள்

காரைக்காலில் 8-ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டன் என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கில், சகாய ராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை காரைக்கால் மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.


