News August 20, 2024

ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனி பகுதியில் இன்று வருவாய் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத பட்டாசு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகே அவர் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தகர செட்டிற்கு சீல் வைத்தனர்.

Similar News

News August 9, 2025

சிவகாசி சிவன் கோவிலில் சிறப்பு தரிசனம்

image

சிவகாசி சிவன் கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை மற்றும் ஆடி தபசு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News August 9, 2025

விருதுநகர்: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<> க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

விருதுநகர் பெண்களே NOTE பண்ணிக்கோங்க!

image

விருதுநகர் மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098

➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181

➟காவல் ஆம்புலன்ஸ்: 112

➟மூத்த குடிமக்கள் உதவி – 14567

நம்ம விருதுநகர் மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!

error: Content is protected !!