News May 17, 2024
ரூ.348 கோடியில் மதுரை ரயில் நிலையம் சீரமைப்பு

மதுரை என்றாலே கோவில் நகரம், தூங்கா நகரம் கூடல்நகரம் என்றே அழைக்கப்படும் ஒரு சிறப்புமிக்க மாவட்டமாகும். பல்வேறு மாவட்டம், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் மதுரைக்கு சுற்றுலாவுக்காக ரயிலில் தான் வருகின்றனர். கோவில் நகரத்திற்கு மேலும் சிறப்பூட்டும் விதமாக மதுரை ரயில் நிலையம் இருப்பதால் ரூ.348 கோடியில் மதுரை ரயில் நிலையத்தை பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
Similar News
News September 15, 2025
மதுரை நகர் பகுதிகளில் மின்தடை

மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செப். 16) நாளை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை எல்லிஸ் நகர் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு குடிசை மாற்றிய வீடுகள் போடி லயன், என்ன கிராஸ் ரோடு மகாபாரதம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள் ரயில்வே காலனி பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம், ஆண்டாள் புரம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
தியாகராஜர் கல்லூரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரிகின்றனர்.
News September 15, 2025
கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.