News August 14, 2024
ரூ.30,000 கோடி டெண்டரை ரத்து செய்த ரயில்வே

ரூ.30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்க விடப்பட்ட டெண்டரை இந்தியன் ரயில்வே ரத்து செய்தது. வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம் இந்தியா நிறுவனம், ரயில் விலையை அதிகமாக குறிப்பிட்டதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே ஒரு ரயிலுக்கு ரூ.140 கோடி விலை நிர்ணயித்திருந்தது. ஆனால், அல்ஸ்தம் நிறுவனம் ஒரு ரயில் விலையை ரூ.150.9 கோடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 15, 2025
தி.மலை : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

திருவண்ணாமலை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.
News September 15, 2025
பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.