News May 10, 2024

ரூ.26 லட்சம் பேருந்து நன்கொடை

image

பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்கள் ஒரு மினி பேருந்தை இயக்கி வருகிறது. பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார்.

Similar News

News October 14, 2025

திண்டுக்கல் :ஊராட்சி செயலாளர் பணி அட்டவணை வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் இளைஞர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பில் ஊராட்சி செயலாளர்கள் பணியிடத்திற்கான மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வகுப்புவாரியான பணியிட இட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.

News October 14, 2025

நத்தம்: கோயிலில் அம்மன் நகை திருட்டு!

image

நத்தம்: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தினமும் காலை, மாலை  நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், மறுநாள் காலை கோவிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போயிருந்தது. இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 14, 2025

திண்டுக்கல்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் – சூப்பர் ஆஃபர்!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!