News December 6, 2024
ரூ.2,000 பெற ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நேற்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. டோக்கன்களில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாள் அன்று ரேஷன் கடைகளில் ரூ.2000 தொகை பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News September 15, 2025
விழுப்புரம்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க

விழுப்புரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News September 15, 2025
விழுப்புரம்: மதுபாட்டில்களை கடத்திய முதியவர் கைது!

செஞ்சி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் & போலீசார் நேற்று கொங்கரம்பட்டு கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே குணசேகர் (62) ஸ்கூட்டரில் வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
News September 15, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!