News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 2, 2025

தி.மலை:போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

image

ஆரணி மாங்கா மரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் தன் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை (நவ.1) காலை தவற தவறவிட்டார். இந்த நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் ஆரணி போலீசார் தேடிய நிலையில் கீழே கிடந்த பணத்தை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகத்திடம ஒப்படைத்தார்.

News November 2, 2025

தி.மலை: பேருந்து மோதியதில் பெண் தலை நசுங்கி பலி!

image

தி.மலை மாவட்டம், ஆரணி வட்டம் அரியப்பாடி கிராமம், புதேரி மேடு பகுதியில், ஆரணி – வேலூர் ரோட்டில் இன்று (நவ.1) நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினிதா என்பவர் பேருந்து மோதி பலியானார். வனிதா இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

News November 2, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.1) இரவு 10 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!