News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 2, 2026
செங்கல்பட்டு: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., திம்மாவரத்தில் உள்ள சுயம்பு சிவகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், வெகு ஆண்டுகளாக உள்ள திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த 2026-யில் திருமணம் செய்ய நினைப்பவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், காளியம்மனுக்கு வளையல் வைத்து வழிபட்டால் உடனே தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இதனை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 2, 2026
செங்கை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)
News January 2, 2026
செங்கை: தாய் கண் முன்னே சிறுவன் பரிதாப பலி!

தாம்பரம் அருகே உள்ள புது பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி(35). இவர், நேற்று(ஜன.1) தனது 2 மகன்களுடன் கூடுவாஞ்சேரி நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது, அரசு பஸ் மோதியதில் அவரடு மகன் பிரதீப்(11) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கற்பகவல்லியும், மற்றொரு மகனும் உயிர் தப்பினர்.


